சிரேஷ்ட பிரஜைகளுக்கு 3000 ரூபா கொடுப்பனவு

சிரேஷ்ட பிரஜைகளுக்கு 3000 ரூபா கொடுப்பனவு

by Staff Writer 15-02-2025 | 4:33 PM

Colombo (News1st) குறைந்த வருமானம் பெறும் சிரேஷ்ட பிரஜைகளுக்கான 3000 ரூபா கொடுப்பனவை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் குறித்த கொடுப்பனவு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் சதுர மிஹிதும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பல்வேறு நடைமுறை சிக்கல்களின் காரணமாக கடந்த காலங்களில் உரிய தினத்திற்குள் அந்தக் கொடுப்பனவை வழங்க முடியாது போனமையினால் சிரேஷ்ட பிரஜைகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக உரிய தரப்பினருடன் கலந்துரையாடி குறித்த கொடுப்பனவையும் நிலுவைத் தொகையையும் தபாலகங்கள் மற்றும் உபதபாலகங்களின் ஊடாக இம்மாதம் 20 ஆம் திகதி முதல் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் ச்சதுர மிஹிதும் தெரிவித்தார்.

அஸ்வெசும பயனாளிகள் குடும்பத்திலுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான குறித்த கொடுப்பனவு நலன்புரி நன்மைகள் சபையினால் நேரடியாக அஸ்வெசும கணக்குகளிலேயே வைப்புச் செய்யப்படுகின்றது.