.webp)
Colombo (News 1st) பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் இன்று(12) பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பதுளையிலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் பண்டாரவளையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த லொறியும் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
விபத்தில் வெல்லவாய, கல்போக்க பகுதியை சேர்ந்த 42 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் 30 வயதான லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.