![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) Google Map-இல் மெக்ஸிகோ வளைகுடாவின் பெயர் அமெரிக்க வளைகுடா என மாற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க வாழ் கூகுள் பயனாளர்களுக்கு மாத்திரம் இந்த பெயர் மாற்றம் காண்பிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கியூபா மற்றும் மெக்ஸிகோ எல்லைகளை கொண்ட வளைகுடா பிராந்தியமானது, நேரடியாகவே அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றத்துடன் கூடிய வகையில் அமெரிக்க பயனாளர்களுக்கு காண்பிக்கப்படுமெனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் உலகின் ஏனைய பகுதிகளில் மெக்ஸிகோ வளைகுடா என கூகுளில் தேடும் போது, அந்தப் பெயருடன் அமெரிக்க வளைகுடா எனும் பெயர் அடைப்புக்குறிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நீண்ட கால நடைமுறையின் மாற்றத்திற்கான ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.