.webp)
Colombo (News 1st) வாதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வாதுவ பொலிஸ் நிலையத்தின் 4 கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை குற்றவிசாரணை பிரிவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
சந்கேநபர்கள் நாளை(13) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் பணி இடைநீக்கம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை இன்று பாணந்துறை வைத்தியசாலையில் இடம்பெற்றதுடன் அவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை தெரியவந்துள்ளது.