Colombo (News 1st) துபாயில் நடைபெறும் 2025 உலகத் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உரையாற்றினார்.
"எதிர்கால அரசாங்கங்களின் வடிவம்" என்ற தொனிப்பொருளில் நடைபெறுகின்ற இந்த மாநாடு நேற்று(11) ஆரம்பமானது.
எதிர்காலத்தில் உலகில் ஏற்படக்கூடிய சவால்களை அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
அத்துடன், சைபர் தாக்குதல்கள் உலகில் பாரிய அச்சுறுத்தல்களாக மாறி வருவதாகவும் இது தொடர்பான சட்டதிட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.