![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) நாளை(12) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நாளைய நாளுக்கான மின்சாரத்திற்கான கேள்வி தொடர்பில் பரிசீலித்ததன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.
ஏற்கனவே திட்டமிட்டவாறு இன்று(11) பிற்பகல் 3.30 முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாட்டை 4 வலயங்களாக பிரித்து நேற்றும்(10) இன்றும்(11) மின்வெட்டை அமுல்படுத்தி மின்சாரத்திற்கான கேள்வியை முகாமைத்துவம் செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை நேற்று அறிவித்திருந்தது.