புதிதாக ஆரம்பமான ரயில் சேவை

by Staff Writer 10-02-2025 | 4:31 PM

Colombo (News 1st) எல்ல ஒடிசி ரயில் சேவை நானுஓயா முதல் எல்ல வரையான தனது பயணத்தை இன்று(10) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

நானுஓயா - பதுளை ரயில் நிலையங்களுக்கிடையிலான "எல்ல ஒடிசி நானுஓயா" என்ற புதிய ரயில் சேவை இன்று காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் சுற்றுலாத் தேவைக்கு அமைய குறித்த ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.

இந்த ரயில் சேவை செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 8.10க்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும் பிற்பகல் ஒரு மணிக்கு பதுளையிலிருந்து நானுஓயாவிற்கும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.