இன்றும்(10) நாளையும்(11) மின்வெட்டு

இன்றும்(10) நாளையும்(11) மின்வெட்டு

by Chandrasekaram Chandravadani 10-02-2025 | 3:45 PM

Colombo (News 1st) நாட்டை 4 வலயங்களாக பிரித்து இன்றும்(10) நாளையும்(11) மின்வெட்டை அமுல்படுத்தி மின்சாரத்திற்கான கேள்வியை முகாமைத்துவம் செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

நேற்று(09) ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கிகளும் செயலிழந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பிற்பகல் 3.30 முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு வலயத்திலும் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.