வோர்ன் - முரளி சவால் கிண்ணம் அவுஸ்திரேலியா வசமானது

2025ஆம் ஆண்டுக்கான வோர்ன் - முரளி சவால் கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்திரேலியா

by Staff Writer 09-02-2025 | 9:30 PM

Colombo (News 1st) 2025ஆம் ஆண்டுக்கான வோர்ன் - முரளி சவால் கிண்ணத்தை அவுஸ்திரேலியா 2 க்கு 0 என கைப்பற்றியது. 

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது. 

திமுத் கருணாரத்னவின் இறுதி டெஸ்ட் போட்டியாக இந்தப் போட்டி அமைந்திருந்தது.

8 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்களுடன் இலங்கை அணி இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. 

குசல் மென்டிஸ் டெஸ்ட் அரங்கில் 21ஆவது அரைச்சதத்தை பதிவு செய்தார். 

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 231 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. 

அதற்கமைய போட்டியில் அவுஸ்திரேலியாவின் வெற்றி இலக்கு 75 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. 

இலங்கை அணி சார்பில் 17ஆவது ஓவரை தனது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய திமுத் கருணாரத்ன வீசினார். 

அவுஸ்திரேலியா 17.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. 

இலங்கை அணி சார்பில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஏழாவது வீரராகவும் பதிவான திமுத் கருணாரத்ன டெஸ்ட் அரங்குக்கு விடைகொடுத்தார்.