![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) அரச நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகளை ஒன்லைன் மூலமாக மேற்கொள்ளக்கூடிய 'GovPay’ வசதி இன்று முதல் நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளது.
முதலாம் கட்டத்தில் இந்த கட்டமைப்பினூடாக 16 அரச நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகளை ஒன்லைன் மூலமாக மேற்கொள்ள முடியுமென இலங்கை தகவல் தொழிநுட்ப முகவரகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான, வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கலை செய்யக்கூடியவாறு இந்தத் திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
டிஜிட்டல் கொடுப்பனவை ஊக்குவிப்பதன் ஊடாக மக்களுக்கு வசதியான, நம்பகமான சேவையை வழங்க முடியுமெனவும் அரசாங்கம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.