Colombo (News 1st) தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவப் பயிற்சிக்காக சில அரச வைத்தியசாலைகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச்செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.
சிலாபம் ஆதார வைத்தியசாலை, சீதுவ விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்கு கடந்த அரசாங்க காலத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு அரசாங்கம் தற்போது எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.