சோள அறுவடையில் தன்னிறைவடைய விசேட வேலைத்திட்டம்

சோள அறுவடையில் நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கான விசேட வேலைத்திட்டம்

by Staff Writer 07-02-2025 | 4:37 PM

Colombo (News 1st) எதிர்வரும் பெரும்போகத்தில், சோள அறுவடையில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாய மற்றும் கால்நடை அமைச்சு தெரிவித்துள்ளது.

20,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோள பயிர்செய்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார்.

சோள அறுவடையை கொள்வனவு செய்வதற்கும் அரசாங்கம் தலையீடு செய்வதாகவும் அவர் மேலும் கூறினார்.