![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவு திறனை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த பகுதியில் புதிய சுத்திகரிப்பு கட்டமைப்பு நிர்மாணிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குமார ஜயகொடி குறிப்பிட்டார்.
இதனூடாக நாளாந்தம் 120,000 பீப்பாய்கள் எரிபொருளை சுத்திகரிக்க முடியும் என அவர் கூறினார்.
தற்போது சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக நாளாந்தம் 40,000 பீப்பாய்கள் எரிபொருள் சுத்திகரிக்கப்படுவதாக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
புதிய சுத்திகரிப்பு கட்டமைப்பை நிர்மாணிப்பதற்காக தற்போது அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.