Colombo (News 1st) மட்டக்களப்பு சந்திவௌி பொலிஸ் பிரிவிற்குட்கட்ட முறக்கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தேவாரபுரம் பகுதியிலிருந்து துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் மீது பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பௌசர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன், காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் 38 வயதான சித்தாண்டி பகுதியைச் சேர்ந்தவர் என சந்திவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை சந்திவௌி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.