![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) ஜேவியர் மிலி(Javier Milei) தலைமையிலான ஆர்ஜென்டின அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் சுகாதார முகாமைத்துவத்தில் காணப்பட்ட வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலகுவதற்கான நடைமுறையை ஆரம்பிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டு 2 வாரங்களில் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.