யாழ்.உதயபுரத்தில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை

யாழ்.உதயபுரத்தில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை ; இருவர் கைது

by Staff Writer 05-02-2025 | 5:19 PM

Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருளுடன் சிலர் கைது செய்யப்பட்டுள்ளளனர்.

யாழ்.உதயபுரம் பகுதியில் இன்று(05) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 104 கிலோகிராம் கஞ்சா தொகை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வந்த படகிலிருந்து குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதாக மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் இரு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனிடையே, 12கிலோ 230 கிராம் கேரள கஞ்சாவுடன் நேற்று(04) இருவர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை, மருதமுனை பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.