சுவீடனில் துப்பாக்கிச்சூடு - 10 பேர் உயிரிழப்பு

சுவீடனில் துப்பாக்கிச்சூடு - 10 பேர் உயிரிழப்பு

by Staff Writer 05-02-2025 | 10:13 AM

சுவீடனில் பல்கலைக்கழகமொன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.

தலைநகர் ஸ்டோக்ஹோமிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Orebro  நகரில் இந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

 சுவீடன் வரலாற்றில்  இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச்சூடு இதுவென அந்நாட்டு பிரதமர் Ulf Kristersson கூறியுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்  என சுவீடன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் எவ்வித பயங்கரவாத நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை என அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.