நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் திருத்தம்?

கடந்த அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தற்போதைய அரசாங்கம் தீர்மானம்

by Staff Writer 05-02-2025 | 9:42 PM

Colombo (News 1st) கடந்த அரசாங்க காலப்பகுதியில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் புதிய திருத்தங்கள் சிலவற்றை கொண்டுவருவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 
 

குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள விதம், சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து முன்வைக்கப்பட்டுள்ள 4 அடிப்படை மனுக்களும் இன்று(05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சட்ட மாஅதிபர் சார்பில் மன்றில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இதனை குறிப்பிட்டார்.

Transparency International Sri Lanka அமைப்பு உள்ளிட்ட சில தரப்பினரால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.