Colombo (News 1st) நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 சிறைக்கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
279 ஆண் கைதிகளுக்கும் 6 பெண் கைதிகளுக்குமே இவ்வாறு விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி பீ திசாநாயக்க தெரிவித்தார்.
இதனிடையே, சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு இன்று(04) சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.
அதற்கமைய, உறவினர்களால் கொண்டுவரப்படும் உணவு, இனிப்புப் பண்டங்களை ஒரு கைதிக்கு மாத்திரம் போதுமான அளவில் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.