மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நியமனம்

by Staff Writer 03-02-2025 | 12:10 AM

Colombo (News 1st) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதியான மொஹமட் லஃபார் தாஹிர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி மொஹமட் லஃபார் தாஹிர் மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக இன்று(02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி பந்துல கருணாரத்ன, ஓய்வுபெறுவதற்கு முன்னதாக விடுமுறை பெற்றுள்ள நிலையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்படும் வரை இந்த நியமனம் நடைமுறையில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.