Colombo (News 1st) 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்திய அணி கைப்பற்றியது.
தொடரின் இறுதி போட்டியில் தென்னாபிரிக்காவை இந்தியா எதிர்கொண்டது.
கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி சகல விக்ெகட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை பெற்றது.
கொங்காடி ட்ரிசா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இலகுவான இலக்கான 83 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இந்திய மகளிர் அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியை அடைந்தது.
கொங்காடி ட்ரிசா 44 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தார்.
போட்டியின் நாயகியாகவும் தொடரின் நாயகியாகவும் கொங்காடி ட்ரிசா தெரிவானார்.
இதேவேளை, இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான தமிழ் நாட்டின் கமலினி குணாலன் ஒரு அரைச்சதம் உட்பட 143 ஓட்டங்களை பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.