UNP - SJB இடையே கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவிற்கு இடையே கலந்துரையாடல்

by Staff Writer 01-02-2025 | 12:01 AM

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவிற்கு இடையே நேற்று(30) கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இரண்டு தரப்பு பிரதிநிதிகளும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் கொழும்பிலுள்ள இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், கயந்த கருணாதிலக்க மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோர் பங்குபற்றினர்.