Colombo (News 1st) 6 அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
அதற்கமைய பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு இன்று(30) முதல் 220 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.
வௌ்ளை சீனி ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 235 ரூபாவிற்கும் மைசூர் பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டு 285 ரூபாவிற்கும் வௌ்ளை பச்சையரிசி ஒரு கிலோகிராமின் விலை ஒரு ரூபாவினால் குறைக்கப்பட்டு 209 ரூபாவிற்கும் சதொச ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது.