மேல் மாகாண ஆளுநர் CID-யில் முறைப்பாடு

மேல் மாகாண ஆளுநர் CID-யில் முறைப்பாடு

by Rajalingam Thrisanno 30-01-2025 | 9:19 PM

Colombo (News 1st)  தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(30) முறைப்பாடு செய்தார்.

துறைமுகத்திலிருந்து முறையான சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின்  அரசியல்வாதிகள் பகிரங்கமாக குற்றச்சாட்டினர்.

விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் என்ன இருந்ததென தெரியாத நிலையில் சமூகத்தில் இவ்விடயம் பூதாகரமாக வெடித்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தம்மை இலக்கு வைத்து அடிப்படையற்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை சிலர் சுமத்துவதாகவும் இதனை தொடர்ந்தும் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ததாகவும் மேல் மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.

தோல்வியடைந்த குழுவொன்று இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது  மெளனமாக இருக்க முடியாது எனவும் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால் முறையான விசாரனைகளை நடத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.