உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

சந்தேகத்திற்கிடமான விதத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டள்ளது

by Staff Writer 27-01-2025 | 12:13 PM

Colombo (News 1st) புத்தளம் - வண்ணாத்திவில்லு - பூக்குளம் களப்பை அண்மித்த கரையோரத்தில் சந்தேகத்திற்கிடமான விதத்தில்  உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வவுனியா - தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வண்ணாத்திவில்லு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.