காலி சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய குழு நியமனம்

காலி சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய குழு நியமனம்

by Staff Writer 27-01-2025 | 3:23 PM

Colombo (News 1st) காலி சிறைச்சாலையில் கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் பிரதி அத்தியட்சகர் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காலி சிறைச்சாலைகளின் செயற்பாடுகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று(26) காலி சிறைச்சாலையில் கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 4 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதலின் போது பிரதான சிறைச்சாலை அதிகாரி அலுவலகத்திற்கு சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதிகளிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதலுக்கு காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்