Colombo (News 1st) வாரியபொல ஹிந்தகொல்ல பகுதியில் பாதுகாப்பற்ற நீர் நிறைந்த குழியொன்றில் மூழ்கி 13 வயதான சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் மற்றுமொரு சிறுவனுடன் நீராடச் சென்றபோது இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
பிரதேச மக்கள் அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
16 வயதான மற்றைய சிறுவன் சிகிச்சை பெற்று வருகின்றார்.