Colombo (News 1st) போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹமாஸ் தரப்பினர் இரண்டாவது பணயக்கைதிகள் குழுவையும் விடுவித்துள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 பெண் பணயக்கைதிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தரப்பினரால் இவர்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 07 ஆம் திகதி ஆரம்பமான மோதலையடுத்து இவர்கள் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, காஸாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்து வந்த போர் நிறுத்தம் கடந்த வாரம் முதல் அமுல்படுத்தப்பட்டது.
காஸாவில் தடுத்துவைக்கப்பட்ட இஸ்ரேலின் பணயக்கைதிகளும் இஸ்ரேலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பலஸ்தீன பெண்கள் மற்றும் சிறுவர்களும் விடுவிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.