Colombo (News 1st) சர்வதேச நாடுகளுக்கான அனைத்து நிதியுதவிகளையும் இடைநிறுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக பிபிசி செய்தி வௌியிட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரிகள் வெளிநாடுகளிலுள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு அனுப்பிய இரகசிய கடிதத்தை மேற்கோள் காட்டி பிபிசி இதனை குறிப்பிட்டுள்ளது.
திட்டங்களை மதிப்பாய்வு செய்த பிறகு வெளியுறவுத்துறை செயலாளர் தீர்மானம் மேற்கொள்ளும் வரை புதிய நிதியுதவிகளும் நிறுத்தி வைக்கப்படும் என்று பிபிசி அறிக்கை கூறுகிறது.
2023ஆம் ஆண்டில் மாத்திரம் அமெரிக்கா சர்வதேச நாடுகளுக்கு 68 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டு மேம்பாட்டு உதவியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் நிர்வாக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.
இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கான அவசர உணவுத் திட்டங்கள், இராணுவ உதவிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு உணவு வழங்குவதற்கான திட்டத்துக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.
எவ்வாறாயினும் யுக்ரைனுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் இல்லை.