கல்கிசை துப்பாக்கிச்சூட்டு 5 சந்தேகநபர்கள் கைது

கல்கிசை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட 5 சந்தேகநபர்கள் கைது

by Staff Writer 25-01-2025 | 8:31 PM

Colombo (News 1st) கல்கிசை சிறிபால மாவத்தையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிதாரியும் அவர்களில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் முன்னாள் இராணுவ உறுப்பினரென பொலிஸார் குறிப்பிட்டனர்.

கல்கிசையில் கடந்த 19 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.