அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

by Staff Writer 25-01-2025 | 8:35 PM

Colombo (News 1st) அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் 

செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்தது.

சில சர்சைக்குரிய சம்பவங்களுடன் குறித்த அரசியல்வாதிகள் தொடர்புப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டது.

குறித்த அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வது தொடர்பான காரணிகள் ஆராயப்படுவதாக திணைக்களம் கூறியது.

சர்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சில  குறைபாடுகள் காணப்படுவதால் அந்த  விசாரணைகளை மீண்டும் முன்னெடுக்க  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டது.