ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க தயார் - டொனால்ட் ட்ரம்ப்

ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க தயாராகும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

by Staff Writer 24-01-2025 | 7:46 PM

Colombo (News 1st) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

யுக்ரேனுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

பொருளாதார ரீதியாக அல்லது ஏனைய இலாப நோக்கிற்காக அன்றி பல மில்லியன் மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்காகவே ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

யுக்ரேனுக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா இணங்காவிடின் ரஷ்யாவுக்கு எதிராக பல தடைகளை விதிக்கவும் இறக்குமதி பொருட்கள் மீதான தீர்வை வரிகளை விதிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக கடந்த 20ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்ற போது டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உடன்படிக்கையை எட்டுவதற்கு யுக்ரேன் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.