Colombo (News1st) எல்ல - ஒடிசி ரயிலில் இடம்பெற்ற ஈ-டிக்கெட் மோசடி தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் தொழில்நுட்ப பிரிவு அதிகாரி ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிநுட்ப பிரிவு அதிகாரி 92 ஈ டிக்கெட்டுக்களுடன் திருகோணமலையில் இன்று(23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த டிக்கெட்டுக்களை வௌிநாட்டினருக்கும் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனுடன் தொடர்புடைய மேலும் இருவர் கண்டி மற்றும் மாத்தளை பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.