Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உணவுக்காக நாளாந்தம் அறவிடப்படும் கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற சபைக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சபைக் குழுவின் உறுப்பினர் கமகெதர திசாநாயக்க இதனை உறுதிப்படுத்தினார்.
இதுவரையில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நாளாந்த உணவுக்காக 450 ரூபா மாத்திரமே அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.