38 துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு

இராணுவ முகாமில் காணாமல் போன T56 துப்பாக்கிகளில் 38 துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு

by Staff Writer 21-01-2025 | 8:05 PM

Colombo (News 1st) இராணுவ முகாமொன்றில் காணாமல் போயிருந்த T56 ரக 73 துப்பாக்கிகளில் 38 துப்பாக்கிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் மேலதிக சோதனைகளுக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர். 

காணாமல் போனதாகக் கூறப்படும் ஏனைய துப்பாக்கிகளைத் தேடும் பொருட்டு விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் கடந்த காலத்தில் இடம்பெறவில்லை எனவும் குறித்த விசாரணைகள் மீண்டும் விரிவாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு உயரதிகாரியொருவர்  கூறியுள்ளார். 

ஏனைய செய்திகள்