Colombo (News 1st) கந்தர - தலல்ல பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 58 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கி பயணித்த பயணிகள் பஸ் மற்றும் எம்பிலிப்பிட்டியவில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஆகியன நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.