Colombo (News 1st) இன்று(18) முற்பகல் 22 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று(18) பிற்பகல் மேலும் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்படலாமென திணைக்களம் கூறியுள்ளது.
சேவை சுற்றுநிருபத்திற்கு அமைய இன்று 68 ரயில் சாரதிகள் கடமையில் இருக்க வேண்டுமென்ற போதிலும் 40 பேர் மாத்திரமே சேவையில் ஈடுபடுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் சாரதிகள் 33 பேர் சுகவீன விடுமுறையை பதிவு செய்துள்ளதுடன் மேலும் 03 சாரதிகள் இரட்டை கடமை நேரத்தை புறக்கணித்துள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
நாளை(19) நடைபெறவுள்ள வினைத்திறன் பரீட்சை காரணமாக ரயில் சாரதிகள் இவ்வாறு விடுமுறையை பதிவு செய்துள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.