மவுசாகலை லயன் குடியிருப்பில் தீ

மவுசாகலை லயன் குடியிருப்பில் தீ

by Staff Writer 18-01-2025 | 2:29 PM

Colombo (News 1st) மஸ்கெலியா - மவுசாகலை தோட்டம் நான்காம் இலக்க லயன் தொடரில் பரவிய தீயால் பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

லயன் குடியிருப்பு தொடரில் நேற்றிரவு(17) பரவிய தீயால் 8 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தீ தற்போது கட்டுப்பாட்டிற்ள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.