பொலிஸ்உத்தியோகத்தர்கள் 9000பேரை நியமிக்க நடவடிக்கை

புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை

by Staff Writer 18-01-2025 | 3:28 PM

Colombo (News 1st) புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு தேவையான நிதி மற்றும் ஏனைய வசதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது சுமார் 75,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்பனவற்றுக்காக கடமையாற்ற வேண்டுமென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள தற்போதைய அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாதமையால் புதிய பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.