ஈரானில் நீதிபதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஈரானில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் சுட்டுக்கொலை

by Staff Writer 18-01-2025 | 10:26 PM

Colombo (News 1st) ஈரானில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெஹ்ரானில் உள்ள உச்ச நீதிமன்றத்திற்கு முன்பாக நடந்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் இன்னுமொரு நீதிபதி படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச்சூட்டின் பின்னர் தாக்குதல் நடத்தியவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.