Colombo (News 1st) உப்பு இறக்குமதியை ஆரம்பித்துள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய அடுத்த வாரமளவில் 15,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய முடியுமென கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சமிலா இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடமிருந்து உப்பு இறக்குமதியை மேற்கொள்வதற்காக 2 இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் குறித்த இறக்குமதி உப்பை தொழிற்றுறையினருக்கு விநியோகிக்கவுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்காக அண்மையில் விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.