Colombo (News 1st) முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே மற்றும் துஷாந்த தினேஷ் ரத்நாயக்க ஆகிய இருவரும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் அவர்கள் இருவரும் இன்று(17) ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையால் பொறுப்பேற்கப்பட்ட டொரிங்டன் அவினியூ பகுதியில் அமைந்துள்ள காணியொன்றுக்கான நட்டஈடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு 90 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.