CIDக்கு அழைக்கப்பட்டிருந்த கோட்டாபய ராஜபக்ஸ

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ

by Staff Writer 17-01-2025 | 2:20 PM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று(17) சென்றிருந்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் அவர் சென்றிருந்தார்.

கதிர்காமம் பகுதியிலுள்ள காணியொன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.