இலங்கை - இந்தியா இடையில் 2 உடன்படிக்கைகள்

இலங்கை - இந்தியா இடையில் 2 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து

by Staff Writer 16-01-2025 | 6:23 PM

Colombo (News 1st) இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் 2 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இன்று(16) கைச்சாத்திடப்பட்டுள்ளன.

மலையகப் பகுதிகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு 60 Smart வகுப்பறைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயஸ்ர்தானிகர் சந்தோஷ் ஜா பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

அதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 48 பாடசாலைகளுக்கும் கண்டி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட தலா 6 பாடசாலைகளுக்கும் Smart வகுப்பறைகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இதேவேளை சட்டம் ஒழுங்கை பேணும் செயற்பாடுகளில் இலங்கை பொலிஸாரின் முக்கிய தேவையை நிறைவேற்றும் நோக்கில் இந்திய அரசினால் வட மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு 80 கெப் வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆர்.பி.செனவிரத்ன ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.