Colombo (News 1st) இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று(15) வௌியிட்டுள்ளது.
இருஅணிகளும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் 2 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரிலும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இருஅணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 6ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ள நிலையில்
2 ஒருநாள் போட்டிகளும் அடுத்த மாதம் 12ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளன.