Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 20ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் பங்கேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 80 நாடுகளின் அரச தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.