Colombo (News 1st) ஜப்பானின் கியூஷூ பிரதேசத்தில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தின் காரணமாக ஜப்பானின் மியாசாகி மற்றும் கொச்சி மாகாணங்களுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
ஒரு மீட்டரை விட அதிக சுனாமி அலைகள் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடற்கரைகள் மற்றும் ஆறுகளை அண்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 23 மைல் ஆழத்தில் ஏற்பட்டதுள்ளதுடன் தென்மேற்கு கியூஷூ பகுதியை பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி இன்றிரவு 9.19 க்கு இந்த நிலநடுக்கும் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் ஜப்பானின் மியாசாகி பகுதியில் சுமார் 20 cm உயர சுனாமி அலையை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சி பகுதியில் 10 cm உயர சுனாமி அலை ஏற்பட்டதாக ஜப்பானின் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.