ஜனாதிபதிக்கு சீனாவிற்கு பயணமானார்

by Staff Writer 13-01-2025 | 10:43 PM

Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்றிரவு(13) சீனாவிற்கு பயணமானார்.

சீன ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஜனாதிபதி நாளை(14)  முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.