Colombo (News 1st) கம்பளை, தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கடத்தப்பட்ட மாணவியுடன் அம்பாறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் பாதுகாப்பிலிருக்கும் மாணவியிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ள நிலையில், அவரை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த குறித்த மாணவி நேற்று முன்தினம்(11) காலை கடத்தப்பட்டார்.
கடத்தப்பட்ட மாணவியின் குடும்பத்தின் உறவுமுறை சகோதரரே குறித்த சந்தேகநபர் என பொலிஸார் கூறினர்.
மாணவியைக் கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வேன், பொலன்னறுவை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
குறித்த வேனின் சாரதி கம்பளை பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.