Colombo (News 1st) Eva கிண்ண அகில இலங்கை பகிரங்க வலைப்பந்தாட்டத் தொடரின் விமானப்படை அணியின் மகளிர் பிரிவினர் கிண்ணத்தை சுவீகரித்தனர்.
இறுதிப் போட்டியில் எதிர்த்து களமிறங்கிய குருணாகல் Net Champs
அணியை தோற்கடித்ததன் மூலம் விமானப்படை அணியின் மகளிர் பிரிவு கிண்ணத்தை வசமாக்கியது.
இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினராக ICL Brands-இன் தலைமை நிறைவேற்றதிகாரி ரோனி சாக்கோ கலந்து கொண்டார்.
15 வயதுக்குட்பட்ட பாடசாலை பிரிவில் குருணாகல் மலியதேவ மகளிர் கல்லூரி கிண்ணத்தை வென்றது.
17 வயதுக்குட்பட்டோருக்கான கிண்ணத்தை நுகேகொடை சுஜாதா பெண்கள் வித்தியாலயம் தனதாக்கியது.
19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தெஹிவளை பிரஸ்பைரேரியன் மகளிர் கல்லூரி வெற்றி பெற்றது.
பகிரங்க பிரிவில் பெண்களுக்கான போட்டிகளில் குழு B-இல் விமானப்படை அணி கிண்ணத்தை வென்றது.
40 வயதுக்கு மேற்பட்ட வீராங்கனைகளுக்காக நத்தப்பட்ட பிரிவில் பிளையிங் பேர்ட்ஸ் விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது.
குறித்த பிரிவில் ஆண்கள் பிரிவில் நீர்கொழும்பு யுனைடட் விளையாட்டு கழகம் கிண்ணத்தை வென்றது.
பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு விமானப்படை மற்றும் குருணாகல் நெட் சேம்ப்ஸ் அணிகள் தகுதி பெற்றன.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற விமானப்படை அணி கிண்ணத்தை வென்றது.
கடந்த வருடமும் குறித்த கிண்ணத்தை விமானப்படை அணி வென்றமை குறிப்பிடத்தக்கது.
யுனைடட் விளையாட்டுக் கழகத்தின் பாரத ரணதுங்க போட்டியின் வலைப்பந்து இராஜாவாக கிரீடத்தை சூடினார்.
நுகேகொடை சுஜாதா பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த மிஹிந்துனி கீர்த்திசிறி வலைப்பந்து இராணியாக முடிசூட்டப்பட்டார்.